என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அதிசய கன்றுக்குட்டி
நீங்கள் தேடியது "அதிசய கன்றுக்குட்டி"
தொட்டியம் அருகே 2 வாய், 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் பழனியாண்டி. வெற்றிலை விவசாயியான இவர் வீட்டில் பசு மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் உள்ள பசுமாடு ஒன்று கன்று குட்டியை ஈன்றது. அந்த கன்று குட்டி வழக்கமான கன்று குட்டியை விட வித்தியாசமாக 2 வாய்கள், 4 கண்கள் இருப்பதை கண்டு பழனியாண்டி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், கன்றுக்குட்டிக்கு 2 தலைகள் இருப்பதால் அறுவை சிகிச்சை மூலம் ஒரு தலையை அகற்றி விடலாம். ஆனால், வாய் மட்டுமே தனியாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
தற்போது பழனியாண்டி குடும்பத்தினர் அந்த கன்றுக்குட்டிக்கு 2 வாய் வழியாகவும் பால் கொடுத்து வருகின்றனர். இந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
×

X